உலகின் புதிய ஏழு அதிசயங்கள் என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை ஜூலை 7 2007 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன[1]
100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல்பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது[2]. வாஷிங்டனை மையமாகக் கொண்டு செயல்படும் கருத்துக்கணிப்பு நிறுவனமான ஜோக்பி இன்டர்னேஷனல் நிறுவனரும் தற்போதைய தலைவர்/தலைமை செயல் அதிகாரியுமான ஜான் ஜோக்பியின் கூற்றுப்படி, நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை "இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப் பெரிய கருத்துக்கணிப்பை" நடத்தியிருக்கிறது[1].
இந்த திட்டம் பரவலான வீச்சில் அதிகாரப்பூர்வ எதிர்வினைகளைப் பெற்றது. சில நாடுகள் தங்களின் இறுதித்தேர்வுக்கு கூடுதலான வாக்குகள் சேகரிக்க பிரயத்தனப்பட்டனர், மற்றவர்கள் இந்த போட்டியை அலட்சியம் செய்தனர் அல்லது விமர்சித்தனர்[2][1]. பரப்புரையின் தொடக்கத்தில் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளைக்கு ஆதரவளித்து அதிசயங்கள் தேர்வு செய்வதில் ஆலோசனைகளை எல்லாம் வழங்கிய ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ 2007 இல் இந்த தாபனத்தில் இருந்து தள்ளி நின்று கொண்டது[3][4]. கூடுதலான நினைவுச்சின்னங்கள் அவற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இணையத்தளங்கள் மூலம் அல்லது தேசிய இணையத்தளங்களிலான வலிமையான ஆதரவு விளம்பரங்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றன. பல நாடுகளில் தேசிய தலைவர்களும் பிரபலங்களும் நியூ7ஒன்டர்ஸ் பரப்புரைக்கு ஊக்கமளித்தனர்[5]. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்த வாக்காளர்களின் புவியியல் ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான பன்முகத்தன்மையைக் கொண்டு பார்த்தால், உலகளாவிய பேச்சுவார்த்தை மற்றும் கலாச்சார பரிவர்த்தனை என்னும் தனது நோக்கம் சாதிக்கப்பட்டிருப்பதைக் காண்பதாக நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்துள்ளது[6].
2001 இல் நிறுவப்பட்ட இந்த நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தனியார் நன்கொடைகள் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள் இவற்றைக் கொண்டே இயங்கியது, எந்த பொதுப் பணத்தையோ அல்லது வரிசெலுத்துவோர் பணத்தையோ ஏற்றுக் கொண்டதில்லை[6]. முடிவு அறிவித்த பிறகு, இதன் மூலம் தமக்கு எந்த வருவாயும் கிட்டவில்லை என்றும் தனது முதலீடுகளையே ஓரளவுக்கு தான் மீட்க முடிந்தது என்றும் நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்தது[7][8].
உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கான வாக்கெடுப்பை, மனிதகுல வரலாற்றில் முதலாவது உலகளாவிய ஜனநாயக நடைமுறை என்று அழைத்தார் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தலைவரான பெர்னார்டு வெபர்[9]. 2007 இல் [[இயற்கையின் புதிய ஏழு அதிசயங்கள் (New7Wonders of Nature) என்றழைக்கப்பட்ட இதே மாதிரியான ஒரு போட்டியை இந்த அறக்கட்டளை துவக்கியிருக்கிறது, தேர்வு விண்ணப்பங்கள் டிசம்பர் 31, 2008 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன. இறுதிக்கு தேர்வு பெற்ற 21 அடையாளங்கள் 2010 கோடை வரை வாக்களிப்புக்குட்பட்டதாக இருக்கும்.
வரலாறு
உலகின் ஏழு அதிசயங்கள் குறித்த சிந்தனையின் மூலம் ஹீரோடோடஸ் (Herodotus) (கிமு 484 - கிமு 425) மற்றும் காலிமாசஸ் (Callimachus) (கிமு 305 - கிமு 240) காலத்தை நோக்கி பின்செல்கிறது, இவர்கள் கிசாவின் பெரும் பிரமிடு, பாபிலோனின் தொங்கும் தோட்டம், ஒலிம்பியா ஜீயஸ் சிலை, எபசசில் (Ephesus) உள்ள ஆர்திமிஸ் கோவில், ஹலிகர்னாசசில் உள்ள மசோலோஸ் நினைவுச்சின்னம், ரோட்ஸ் பேருருவச்சிலை (Colossus of Rhodes) மற்றும் அலெக்சான்ட்ரியா கலங்கரை விளக்கம் ஆகியவை அடங்கிய பட்டியலை தயாரித்தனர். கிசாவின் பெரும் பிரமிடு மட்டும் தான் இன்னும் நிற்கிறது. ஏனையவை மற்ற ஆறும் நிலநடுக்கம், தீ, அல்லது பிற காரணங்களால் அழிக்கப்பட்டு விட்டன[10].
புதிய ஏழு அதிசயங்களுக்கான இறுதி தேர்வுகள்.
நியூ7ஒன்டர்ஸின் மைல்கற்கள் பக்கத்தின் படி[11], சுவிசிலிருந்து இயங்கும் கனடா நாட்டவரான திரைப்பட இயக்குநர் மற்றும் விமான ஓட்டியான பெர்னார்டு வெபர் இந்த திட்டத்தை செப்டம்பர் 1999 இல் தொடங்கினார். இந்த திட்டத்தின் இணையத் தளம் 2001 இல் தொடங்கப்பட்டது. கனடாவில் இருந்து இயங்கும் தளத்திற்கு வெபர் $700 தொகையை அளித்தார்[1]. இந்தப் புதிய பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமென்றால், அதிசயங்கள் மனிதனால் படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும், 2000 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும், ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக இருக்க வேண்டும். நவம்பர் 24 2005 வரையில், 177 நினைவுச் சின்னங்கள் பரிசீலனைக்கு வந்தன. ஜனவரி 1, 2006 இல் இந்த பட்டியலில் இருந்து 21 தளங்கள் மட்டும்,[12] ஐந்து கண்டங்களில் இருந்தான உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை நிபுணர்கள் ஆறுபேர், சாகா ஹதித், சீசர் பெல்லி, டடோ ஆன்டோ, ஹாரி சீட்லர், ஆசிஸ் டேயோப், யுங் ஹோ சாங், கொண்ட ஒரு குழு மற்றும் அதன் தலைவரான யுனெஸ்கோவின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பெட்ரிகோ மேயர் ஆகியோர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நியூ7ஒன்டர்ஸ் கூறியது. பிறகு உலகின் ஏழு பழைய அதிசயங்களில் எஞ்சியிருப்பதான கிசா பிரமிடுகள் வாக்கெடுப்பில் இருந்து நீக்கப்பட்டு பட்டியல் 20 ஆகக் குறைக்கப்பட்டது, கிசா பிரமிடுக்கு மதிப்பார்ந்த நியூ7ஒன்டர்ஸ் தகுதியாளர் என்ற கவுரவம் அளிக்கப்பட்டது[13].
ஒவ்வொரு இறுதித்தேர்வுக்குமான காரணங்களை இந்த திட்டம் முடிவு செய்தது, சீனப் பெருஞ்சுவரின் விடாமுயற்சி, தாஜ் மஹாலுக்கு காதல், ஈஸ்டர் தீவு சிலைகளின் பிரமிப்பு என.
இடையில் 7 வெற்றிச் சின்னங்களையும், கூடுதலாக அக்ரோபோலிஸ், ஈஸ்டர் தீவு, மற்றும் ஈபிள் கோபுரம் இவற்றை அடக்கிய ஒரு முதல் 10 பட்டியல், புள்ளிகள் கொண்டு வெளியிடப்பட்டது[14].
யுனெஸ்கோவின் முன்னாள் டைரக்டர் ஜெனரலான பெட்ரிகோ மேயர் திட்டத்தின் நிபுணர்குழுவில் தனிநபர் தலைவராக இருந்தார்[15]. நியூ7ஒன்டர்ஸ் யுனெஸ்கோவுடன் தொடர்புடையதல்ல[16].
பரப்புரையின் அடிப்படை இலக்கு உலகளாவிய பரிமாற்றத்தையும் கலாச்சாரங்களுக்கு இடையிலான போற்றலை ஊக்கப்படுவதும் ஆகும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.இது தவிர, "உலக நினைவு" என்று நியூ7ஒன்டர்ஸ் அழைப்பதான ஒன்றும் உருவாக்கப்பட்டது, இதன் பொருள் உலகமெங்கிலும் ஒவ்வொருவரும் நினைவில் கொண்டிருக்கும் பகிர்ந்து கொள்ளும் 7 விஷயங்கள் என்பதாகும்.[17]உலகமறிந்த நினைவுச் சின்னங்கள் இடையிலான போட்டி, அதன் மீதான வருங்கால வாக்கெடுப்புகள், தொடர்பான வியாபாரங்கள், மற்றும் வாக்காளர் தரவுத்தள பயன்பாடு இவற்றில் இருந்து வரும் வருவாயின் ஒரு பகுதியை,[18] உலகின் பல்வேறு மீட்சி திட்டங்களை உருவாக்க, அல்லது அவற்றுக்கு உதவ பயன்படுத்துவதற்கும் நியூ7ஒன்டர்ஸ் விரும்புகிறது.[8][19][2]உலகின் தனித்துவமிக்க கலாச்சார பண்பாட்டு தளங்கள் (...) குறித்த விழிப்புணர்வை வளர்ப்பது என்பது எப்போதும் நியூ7ஒன்டர்ஸின் ஒரு இலக்காக இருந்து வந்திருக்கிறது."இந்த உணர்வை வளர்ப்பது அதனளவிலேயே ஒரு அதிசயமாகத் திகழும்" என்கின்றன ஜூலை 5, 2007 தினத்தின் நியூஸ்விக் மற்றும் MSNBC.
No comments:
Post a Comment