Wednesday, October 26, 2011

போதி தர்மர்.......

தென் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் இந்த ‘போதி தர்மர்‘. இவரது தந்தை பெயர் ‘காந்தவர்மன்‘. பல்லவர்கள் காலத்தில், தென் இந்தியாவில் பிற நாடுகளுடனான வர்த்தகம் சிறப்பாக இருந்தது சீன யாத்ரிகரான யுவாங் சுவான், பல்லவர்களின் ஆட்சி காலத்தில் தான் தென் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தொங்கியது. அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர், மகாயான புத்த மதத்தை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். இவரே சாவூலின் குங்ஃபு என்ற தற்காப்பு கலையை சீனாவில் அறிமுகப்படுத்தியதாக சான்றுகள் கூறுகின்றன.
கி.பி. 495 ஆம் ஆண்டு BA TUO (BUDDHABHADRA) என்ற இந்திய துறவி XIAO SHENG என்ற புத்த மதத்தை பரப்புவதற்காக சீனா சென்றார். அவரை SHAO WEN என்ற சீன அரசன் வரவேற்று SHAOSHI என்ற மலையின் அடிவாரத்தில் உள்ள நிலத்தை அவருக்கு கொடுத்தார்.
BA TUO அந்த நிலத்தில் SHAOLIN கோவிலை நிறுவினார்.
அந்த காலகட்டத்தில் போதிதர்மர் (BODHI DHARMA) என்ற ஒரு இந்திய அரச குடும்பத்தை சேர்ந்தவர் வாழ்ந்து இருக்கிறார். காந்தவர்மன் என்ற பல்லவ மன்னனின் மூன்றாவது மகன் தான் இந்த போதி தர்மர். காந்தவர்மன் தன மகன்களிலேயே போதி தர்மர் மீது தான் அதிக பாசத்துடன் இருந்தார். இதனால் பொறாமை கொண்ட மற்ற இரு சகோதரர்களும் போதி தருமரை கொலை செய்ய முயன்றனர். ஆனால் போதி தர்மர் அந்த முயற்சியிலிருந்து தப்பித்தார். மேலும் போதி தர்மர் அரசியல் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருந்தார். அவர் ஒரு புத்த துறவியின் போதனைகளை பெற்று புத்த துறவியாக மாறினார்.
போதி தருமரின் குரு, அவருடைய அந்திம காலத்திற்கு பிறகு போதி தர்மர் சீனா செல்ல வேண்டுமென கட்டளை இட்டார். அந்த காலத்தில் சீனா ZHEN DAN என அழைக்கப்பட்டது. சில ஆண்டுகளில் குரு இறந்துவிடவே,போதி தர்மர் சீனா செல்ல தயாரானார். இந்த காலகட்டத்தில் போதி தருமரின் மூத்த சகோதரரும் அதன் பிறகு அவர் மகனும் மன்னராக ஆகி இருந்தனர். மன்னனான போதி தருமரின் மூத்த சகோதரனின் மகன், தன்னுடைய சித்தப்பாவான போதி தர்மர் மீது அதிக பாசம் கொண்டிருந்தான். தன்னுடைய தந்தையும்,அவருடைய சகோதரரும் போதி தருமருக்கு செய்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தமாக, போதி தருமரை தன அருகிலேயே வைத்திருக்க ஆசைப்பட்டார். ஆனால் போதி தர்மர் தன குருவின் கட்டளைப்படி சீனா செல்வதை அறிந்துகொண்டார். எனவே அவர் சீன மக்களிடம் போதி தருமரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என தூது அனுப்பினார். இது சீன மக்களிடம் ஆச்சரியத்தை புகழையும் உண்டுபண்ணியது.கி.பி. 527 ம் ஆண்டு, BA TUO துறவி SHAOLIN கோவிலை நிறுவி 32 ஆண்டுகள் கடந்த பின்னர் போதி தர்மர் சீனாவின் Guangdong வந்தடைந்தார். அங்கு அவர் DA MAO என்று அழைக்கப்பட்டார். DA SHENG என்ற மஹாயான புத்த மதத்தை பரப்புவதற்கு DA MAO சீனா வந்துள்ளார் என்பதை அறிந்த மக்கள்,அவருடைய சொற்பொழிவை கேட்க ஆசைப்பட்டனர். ஆனால் DA MAO என்ற போதி தர்மர் பலமணி நேரம் தியானத்தில் இருந்துவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் சென்றுவிடுவார். ஆனால் அவருடைய செயல்கள் மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வை மட்டும் ஏற்ப்படுத்தி இருந்தது.
சீனர்களிடம் போதி தருமருடைய ஓவியங்களை காணலாம். கரிய அடர்த்தியான புருவம், பெரிய பருத்த மூக்கு, தாடி மீசை, குண்டு விழிகள் ஆகியவற்றுடன்அவரை வரைந்திருப்பார்கள்.
போதி தர்மரைப் பற்றி வேறு சில வரலாறுகளும் இருக்கின்றன.
அவர் சீனாவில் தொடர்ச்சியாக ஒன்பதாண்டுகள் தியானத்தில் இருந்தாராம். ஒரு சுவற்றை நோக்கி அமர்ந்துகொண்டு அதனையே பார்த்தவண்ணம் இருந்தாராம். ஆரம்பத்தில் தூக்கம் வந்ததாம். ஆகவே தம்முடைய கண்களின் மேல் இமைகளை எடுத்து தூக்கி எறிந்துவிட்டாராம். அந்தவண்ணம் அவர் கண்களை மூடாமல் தூங்காமல் இருந்தாராம்.
அந்த இமைகள் விழுந்த இடத்தில் ஒரு செடி முளைத்ததாம். அந்தச் செடியின் இலைகள் காய்ந்து உலர்ந்து சருகுகளாக அங்கே கிடந்தனவாம்.
ஒரு புத்த பிட்சு ஒருமுறை திறந்த வெளியில் அந்தச்செடி இருந்த இடத்திற்கு அருகில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தாராம். அவர் எப்போதுமே வெந்நீர்தான் குடிப்பவர். அந்த வெந்நீர்ப் பாத்திரத்துக்குள் அந்தச் செடியின் சருகுகள் காற்றால் அடித்துக்கொண்டுவரப்பட்டு விழுந்துவிட்டனவாம். நீரை வீணாக்க விரும்பாத புத்தபிட்சு, அந்தச் சருகுகளை எடுத்தெறிந்துவிட்டு, அந்த வெந்நீரைப் பருகினாராம்.
அதனைப் பருகியதும் உடல் சுறுசுறுப்பாகவும் மனது தெளிவாகவும் இருந்ததாம். அதுவரைக்கும் அழுத்திக்கொண்டிருந்த சோம்பல் தூக்கம் ஆகியவை சென்ற இடம் தெரியாமல் ஓடி மறைந்துவிட்டனவாம்.
அந்தச்செடியை ஆராய்ந்து பர்த்துவிட்டு, அதன் இலைகளைப் பானமாக்கி குடிக்கும் வழக்கத்தைத் தாமும் மேற்கொண்டு விட்டு சீனாவிலும் அந்த பிச்சு பரப்பிவிட்டாராம். அப்படித் தோன்றியதுதான் தேயிலையாம்.
போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிட்சுகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள்.
ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும்.
உடற்பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்தார்.
அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக்கொடுத்தார். தங்களது கோயில்களைச்
சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை.
உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளயும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில்காயம் ஏற்படாமுறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.
கப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் இந்த ‘போதி தர்மர்’. இவரது தந்தை பெயர் ‘காந்தவர்மன்‘. பல்லவர்கள் காலத்தில், தென் இந்தியாவில் பிற நாடுகளுடனான வர்த்தகம் சிறப்பாக இருந்தது சீன யாத்ரிகரான யுவாங் சுவான், பல்லவர்களின் ஆட்சி காலத்தில் தான் தென் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தொங்கியது. அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர், மகாயான புத்த மதத்தை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். இவரே சாவூலின் குங்ஃபு என்ற தற்காப்பு கலையை சீனாவில் அறிமுகப்படுத்தியதாக சான்றுகள் கூறுகின்றன.
கி.பி. 495 ஆம் ஆண்டு BA TUO (BUDDHABHADRA) என்ற இந்திய துறவி XIAO SHENG என்ற புத்த மதத்தை பரப்புவதற்காக சீனா சென்றார். அவரை SHAO WEN என்ற சீன அரசன் வரவேற்று SHAOSHI என்ற மலையின் அடிவாரத்தில் உள்ள நிலத்தை அவருக்கு கொடுத்தார்.
BA TUO அந்த நிலத்தில் SHAOLIN கோவிலை நிறுவினார்.
அந்த காலகட்டத்தில் போதிதர்மர் (BODHI DHARMA) என்ற ஒரு இந்திய அரச குடும்பத்தை சேர்ந்தவர் வாழ்ந்து இருக்கிறார். காந்தவர்மன் என்ற பல்லவ மன்னனின் மூன்றாவது மகன் தான் இந்த போதி தர்மர். காந்தவர்மன் தன மகன்களிலேயே போதி தர்மர் மீது தான் அதிக பாசத்துடன் இருந்தார். இதனால் பொறாமை கொண்ட மற்ற இரு சகோதரர்களும் போதி தருமரை கொலை செய்ய முயன்றனர். ஆனால் போதி தர்மர் அந்த முயற்சியிலிருந்து தப்பித்தார். மேலும் போதி தர்மர் அரசியல் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருந்தார். அவர் ஒரு புத்த துறவியின் போதனைகளை பெற்று புத்த துறவியாக மாறினார்.
போதி தருமரின் குரு, அவருடைய அந்திம காலத்திற்கு பிறகு போதி தர்மர் சீனா செல்ல வேண்டுமென கட்டளை இட்டார். அந்த காலத்தில் சீனா ZHEN DAN என அழைக்கப்பட்டது. சில ஆண்டுகளில் குரு இறந்துவிடவே,போதி தர்மர் சீனா செல்ல தயாரானார். இந்த காலகட்டத்தில் போதி தருமரின் மூத்த சகோதரரும் அதன் பிறகு அவர் மகனும் மன்னராக ஆகி இருந்தனர். மன்னனான போதி தருமரின் மூத்த சகோதரனின் மகன், தன்னுடைய சித்தப்பாவான போதி தர்மர் மீது அதிக பாசம் கொண்டிருந்தான். தன்னுடைய தந்தையும்,அவருடைய சகோதரரும் போதி தருமருக்கு செய்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தமாக, போதி தருமரை தன அருகிலேயே வைத்திருக்க ஆசைப்பட்டார். ஆனால் போதி தர்மர் தன குருவின் கட்டளைப்படி சீனா செல்வதை அறிந்துகொண்டார். எனவே அவர் சீன மக்களிடம் போதி தருமரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என தூது அனுப்பினார். இது சீன மக்களிடம் ஆச்சரியத்தை புகழையும் உண்டுபண்ணியது.கி.பி. 527 ம் ஆண்டு, BA TUO துறவி SHAOLIN கோவிலை நிறுவி 32 ஆண்டுகள் கடந்த பின்னர் போதி தர்மர் சீனாவின் Guangdong வந்தடைந்தார். அங்கு அவர் DA MAO என்று அழைக்கப்பட்டார். DA SHENG என்ற மஹாயான புத்த மதத்தை பரப்புவதற்கு DA MAO சீனா வந்துள்ளார் என்பதை அறிந்த மக்கள்,அவருடைய சொற்பொழிவை கேட்க ஆசைப்பட்டனர். ஆனால் DA MAO என்ற போதி தர்மர் பலமணி நேரம் தியானத்தில் இருந்துவிட்டு யாரிடமும் எதுவும் பேசாமல் சென்றுவிடுவார். ஆனால் அவருடைய செயல்கள் மக்கள் மத்தியில் ஒருவித அதிர்வை மட்டும் ஏற்ப்படுத்தி இருந்தது.
சீனர்களிடம் போதி தருமருடைய ஓவியங்களை காணலாம். கரிய அடர்த்தியான புருவம், பெரிய பருத்த மூக்கு, தாடி மீசை, குண்டு விழிகள் ஆகியவற்றுடன் அவரை வரைந்திருப்பார்கள்.
போதி தர்மரைப் பற்றி வேறு சில வரலாறுகளும் இருக்கின்றன.
அவர் சீனாவில் தொடர்ச்சியாக ஒன்பதாண்டுகள் தியானத்தில் இருந்தாராம். ஒரு சுவற்றை நோக்கி அமர்ந்து கொண்டு அதனையே பார்த்தவண்ணம் இருந்தாராம். ஆரம்பத்தில் தூக்கம் வந்ததாம். ஆகவே
தம்முடைய கண்களின் மேல் இமைகளை எடுத்து தூக்கி எறிந்துவிட்டாராம். அந்தவண்ணம் அவர் கண்களை மூடாமல் தூங்காமல் இருந்தாராம்.
அந்த இமைகள் விழுந்த இடத்தில் ஒரு செடி முளைத்ததாம். அந்தச் செடியின் இலைகள் காய்ந்து உலர்ந்து சருகுகளாக அங்கே கிடந்தனவாம்.
ஒரு புத்த பிட்சு ஒருமுறை திறந்த வெளியில் அந்தச்செடி இருந்த இடத்திற்கு அருகில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தாராம். அவர் எப்போதுமே வெந்நீர்தான் குடிப்பவர். அந்த வெந்நீர்ப் பாத்திரத்துக்குள் அந்தச் செடியின் சருகுகள் காற்றால் அடித்துக்கொண்டுவரப்பட்டு விழுந்துவிட்டனவாம். நீரை வீணாக்க விரும்பாத புத்தபிட்சு, அந்தச்
சருகுகளை எடுத்தெறிந்துவிட்டு, அந்த வெந்நீரைப் பருகினாராம்.
அதனைப் பருகியதும் உடல் சுறுசுறுப்பாகவும் மனது தெளிவாகவும் இருந்ததாம். அதுவரைக்கும் அழுத்திக்கொண்டிருந்த சோம்பல் தூக்கம் ஆகியவை சென்ற இடம் தெரியாமல் ஓடி மறைந்துவிட்டனவாம்.
அந்தச்செடியை ஆராய்ந்து பர்த்துவிட்டு, அதன் இலைகளைப் பானமாக்கி குடிக்கும் வழக்கத்தைத் தாமும் மேற்கொண்டுவிட்டு சீனாவிலும் அந்த பிச்சு பரப்பிவிட்டாராம். அப்படித் தோன்றியதுதான் தேயிலையாம்.
போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிட்சுகள் பிச்சை எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே வாழ்ந்திருந்தார்கள்.
ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின் மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும்.
உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார்.
அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக்கொடுத்தார். தங்களது கோயில்களைச்
சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவைஅவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை. உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளயும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில்காயம் ஏற்படா
முறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.
அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக் கோயில்களை ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.

No comments: